Local

11 ஆண்டுகளுக்குப் பின்னர் வாக்களித்த மஹிந்த!

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, 11வருடங்களின் பின்னர் இன்று (05) இம்முறை இடம்பெறும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2011இல் தான் இறுதியாக வாக்களித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (05) பம்பலப்பிட்டியிலுள்ள லிண்ட்சே மகளிர் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் இம்முறை தேர்தல் இடம்பெறுவதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், 65 வயதான தான் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துள்ளதன் மூலம், வாக்களிப்பு நிலையங்கள் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே தான் இம்முறை வாக்களித்ததாக, அவர் தெரிவித்தார்.
இன்று இடம்பெறும் 2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில், மக்கள் தங்களது உரிமையை பயன்படுத்த வேண்டும் என, அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading