LocalNorth

110 கிலோ கஞ்சாவுடன் மூவர் வல்வெட்டித்துறையில் கைது!

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் சுமார் 110 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகளைக் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் 3 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் நேற்றுப் பிற்பகல் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

“சந்தேகநபர்கள் மூவரும் கஞ்சா போதைப்பொருளை வேறு இடத்துக்குக் கடத்த முற்பட்டபோதே கைதுசெய்யப்பட்டனர்.

கஞ்சாப் பொதிகளுடன் கைதான அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

விசாரணைகளின் பின்னரே மேலதிக விவரம் தெரியவரும்” என்றும் பொலிஸார் கூறினர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading