Sports

13 வருடங்களின் பின் ஹஷிம் அம்லாவின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

சுப்மன் கில் 38 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஹஷிம் அம்லாவின் சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார்.

ஹஷிம் அம்லாவுக்கு 2000 ஓட்டங்களை எடுக்க 40 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது.

பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் 53 ஓட்டங்களை சுப்மன் கில் பெற்றிருந்த நிலையில், 2000 ஓட்டங்களை பெற அவருக்கு 14 ஓட்டங்கள் மாத்திரமே நேற்றைய போட்டியில் தேவைப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றைய நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் ஏழாவது ஓவரில் டிரென்ட் போல்ட் வீசிய முதல் பந்தை நான்கு ஓட்டமாக மாற்றியதன் மூலம் சுப்மன் கில் இந்த சாதனையை படைத்தார்.

இருப்பினும் கில், 14ஆவது ஓவரில் 31 பந்துகளில் 26 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் சுப்மன் கில் பெர்குசனிடம் விக்கெட்டை பறிகொடுத்திருந்தார்.

இதேவேளை, 2011 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஹஷிம் அம்லா இந்த சாதனையை படைத்திருந்தார்.

எனினும் ஹஷிம் அம்லாவின் சாதனையை 13 வருடங்களின் பின்னர் சுப்மன் கில் முறியடித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading