LocalNorth

134 பேருக்கு வடக்கில் இன்று அரச நியமனம்!

வடக்கு மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவின் கீழுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 134 பேருக்கு அரச நியமனம் வழங்கப்பட்டது.

மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர் திருமதி சரஸ்வதி மேகநாதன் தலைமையில் யாழ். பொது நூலகத்தில் இன்று திங்கட்கிழமைகாலை நடைபெற்ற நிகழ்வில் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இந்த நியமனங்களை வழங்கினார்.

இதில் 42 சாரதிகள், 73 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மகளிர் விவகார அமைச்சின் கீழ் 19 பேர் என மொத்தம் 134 பேர் அரச நியமனம் பெற்றனர்.

இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர், முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading