World

1500 முகக் கவசங்களை பயன்படுத்தி திருமண உடை தயாரிப்பு!

இங்கிலாந்தில் ஆயிரத்து 500 முக கவசங்களை பயன்படுத்தி இளம்பெண் அணியும் திருமண உடை அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி ,இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் முற்றிலுமாக தளர்த்தப்பட்டன. இதனை அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ,இந்நிலையில் அங்குள்ள ஆடை வடிவமைப்பாளர் Tom Silverwood என்பவர் மணப்பெண் அணிவதற்காக 1500 முக கவசங்களை பயன்படுத்தி திருமண உடை தயாரித்து கொடுத்துள்ளார்.

வெள்ளை நிற கவுன் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடையை Jemima Hambro என்ற மாடல் பெண் அணிந்துள்ள புகைப்படம் அதிகம் பேரால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading