World

187 அடி பெளத்த சிலைக்கு 35 கிலோ முகக்கவசம் அணிவிப்பு!

ஜப்பானிலுள்ள 187 அடி உயரமான பௌத்த தேவதை சிலையொன்றுக்கு 35 கிலோகிராம் எடையுள்ள முகக்கவசம் அணிவிக்கப்பட்டது.

இதன்படி ,கனோன் மற்றும் குவாய் யின் என அழைக்கப்படும் கருணை தேவதையின் (Goddess of Mercy) சிலை பிரமாண்ட சிலை ஜப்பானின் அய்ஸுவாகாமட்ஸு (Aizuwakamatsu) நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

57 மீற்றர்கள் (187 அடி) உயரமான சிலை இது. இச்சிலைக்கு இன்று முகக்கவசம் அணிவிக்கப்பட்டது.

அதற்காக 35 கிலோகிராம் எடையுள்ள முகக்கவசம் பயன்படுத்தப்பட்டது. ஊழியர்கள் நால்வர் கயிறுகள் வழியாக ஏறிச்சென்று இச்சிலைக்கு முகக்கவசம் அணிவித்தனர்.

மேலும் ,கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பிரார்த்தித்து இம்முகக்கவசம் அணிவிக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading