World

2 1/2 கோடி ரூபாய்க்கு ஏலம் போன மைக்கல் ஜாக்சனின் தொப்பி

உலகப் புகழ் பெற்ற பொப் இசை கலைஞரான மறைந்த மைக்கல் ஜாக்சனின் தொப்பியொன்று இலங்கை மதிப்பில் இரண்டு கோடி 66 இலட்சம் ரூபாய்க்கு ஏலமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏலம் போன குறித்த தொப்பி மைக்கல் ஜாக்சன் புகழின் உச்சத்தில் இருந்த போது பயன்படுத்தப்பட்டது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிளக் பெடோரா என்ற வகையை சேர்ந்த இந்த தொப்பி 77,640 யூரோவுக்கு ஏலம் போயுள்ளது.

பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் நடைபெற்ற இந்த ஏலத்தில் மைக்கல் ஜாக்சனின் தொப்பி 60 ஆயிரம் முதல் ஒரு யூரோக்கள் வரை ஏலம் போகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தொப்பி 77 ஆயிரத்து 640 யூரோக்களுக்கு ஏலம் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைக்கல் ஜாக்சனின் முத்திரை நடன அசைவுகளில் ஒன்றான “Moon Walk ” போன்ற தனித்துவமான நடன அசைவுகளின் போது அவர் அணிந்திருந்த இந்த தொப்பியும் தனித்துவமாக விளங்கியது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading