Local

நீராடச் சென்ற 2 சகோதரிகள் பரிதாப மரணம்!

அலவ்வ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலகும்புர சங்கிலி பாலத்துக்கு அருகில் உள்ள ஆற்றில் குடும்பத்தாருடன் நீராடச் சென்ற சகோதரிகளான சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

14 மற்றும் 11 வயதுடைய இரு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மெட்டிஹேன, பொரமடல பகுதியைச் சேர்ந்த சகோதரிகளான இனேகா சஷினி மற்றும் திரோஷ ஜிமேஷிகா ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் பொல்கஹவெல வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading