Local

மதுஷுடன் கைதுசெய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தல்!!

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் – பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட மேலும் இருவர் இன்று அதிகாலை நாடு கடத்தப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளை அடுத்து 37 வயதுடைய மொஹமட் நசீம் மொஹமட் பைசால் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

அவருடன் நாடு கடத்தப்பட்ட 30 வயதுடைய மொஹமட் முபார் மொஹமட் ஜபீரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading