LocalNorth

பிள்ளைகள் கண்முன் மனைவியை வெட்டிக் கொலைசெய்த கணவன்!

முல்லைத்தீவு, உடையார்கட்டு, மூங்கிலாறு வடக்குப் பகுதியில் மனைவியை கணவன் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான 44 வயதுடைய காந்தரூபி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

உயிரிழந்த பெண்ணின் கணவரான சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பிள்ளைகள் கண் முன்னால் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் புதுக்குடியிருப்புப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading