Local

2022-ல் கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வருவோம் உலக சுகாதார
நிறுவனம் நம்பிக்கை!

உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன்பின் உலகம் முழுவதும் பரவிய இந்த வைரஸ் தற்போது உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் என்னும் புதிய நோய்த் தொற்றாக பரவி வருகிறது.

இது தடுப்பூசிகளின் செயல்திறனை குறைத்து அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட வீரியமிக்க ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், இந்தியா உட்பட 90 உலக நாடுகளில் பரவி உள்ளது.

இந்நிலையில், ஒமிக்ரான் குறித்து விளக்கமளித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “2020-ல் எச்.ஐ.வி, மலேரியா மற்றும் காசநோய் ஆகியவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, 2021-ல் கொரோனா காரணமாக உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

கொரோனாவின் மாறுபாடான ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்காவின் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அது பல நாடுகளுக்குப் பரவி வருகிறது. 2022-ல் நாம் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும் ஆண்டாக அமைய வேண்டும்.

2022ம் ஆண்டு அனைத்து நாடுகளும் எதிர்கால பேரழிவைத் தடுப்பதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கும், முதலீடு செய்யும் ஆண்டாகவும் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading