Cinema

2023ல் கோலிவுட்டை மிரட்டிய சர்ச்சைகள் ஒரு பார்வை

2023ம் ஆண்டு கோலிவுட்டில் பல சர்ச்சைகளும் நிரம்பி வழிந்த ஆண்டாக இது அமைந்துள்ளது.

இந்த ஆண்டு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட பிரச்சினைகள் சிலவற்றை பற்றி பார்க்கலாம்.

சூப்பர்ஸ்டார் சர்ச்சை

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு சொந்தக்காரராக இருந்தாலும், விஜய் தான் தற்போதைய சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்கள் மோதிக்கொண்டனர்.

இந்த மோதலில் ஒருகட்டத்துக்கு மேலே பிரபலங்களும் இணைந்துகொண்டனர்.

ரஜினிக்கு ஆதரவாக கலாநிதி மாறன் பேச, மறுபுறம் விஜய் தரப்பில் இருந்து ரத்னகுமார் அதற்கு பதிலடி கொடுக்க என்று பிரச்சினைகள் நீண்டு கொண்டே சென்றது.

இதனை பார்த்த நடிகர் விஜய் “சூப்பர்ஸ்டார்“ சர்ச்சைக்கு லியோ பட சக்சஸ் மீட்டில் முற்றுப்புள்ளி வைத்தார். அதில் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் அது ரஜினி மட்டும் தான் என விஜய் கூறியதை அடுத்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

Oruvan

இமான் – சிவகார்த்திகேயன் மோதல்

2023-ல் அதிகம் விவாதிக்கப்பட்ட சர்ச்சைகளில் டி இமான் – சிவகார்த்திகேயன் இடையேயான மோதல் விவகாரமும் ஒன்று.

சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இமான் ஒரு பேட்டியில் கூறியதை அடுத்து, சிவகார்த்திகேயனையும் டி.இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட்டையும் ஒப்பிட்டு பேசத்தொடங்கினர்.

பின்னர் இதுகுறித்து மோனிகா விளக்கம் அளித்துவிட்டாலும் சிவகர்த்திகேயன் இந்த விவகாரத்தில் மெளனம் காத்து வருவதால் சர்ச்சைகள் தொடர்கின்றது.

Oruvan

பிரதீப் ரெட் கார்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் டைட்டில் ஜெயிக்கும் அளவுக்கு தகுதியுள்ள போட்டியாளராக வலம் வந்த பிரதீப் ஆண்டனி திடீரென ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களிடம் ஆபாசமாக பேசியதாகவும், அவரால் அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறப்பட்டது.

24 மணித்தியாளமும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதால் அங்கு அப்படி ஒரு சம்பவம் நடக்க வில்லை என்பதை ரசிகர்கள் கண்டுப்பிடித்தனர். இதனால் தொகுப்பாளர் கமல்ஹாசன் மீதும், பிக் பாஸ் அணியினர் மீதும் இன்றும் ரசிகர்கள் உச்சக்கட்ட கோவத்தில் உள்ளனர்.

Oruvan

பருத்திவீரன் சர்ச்சை

பருத்திவீரன் படம் வெளியாகி 15 ஆண்டுகளுக்கு பின் அப்படத்தின் பிரச்சினை இந்த ஆண்டு பூதாகரமாக வெடித்தது. இயக்குநர் அமீரை திருடன் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இதனை அடுத்து, அமீருக்கு ஆதரவாக களமிறங்கிய சமுத்திரக்கனி, சசிகுமார் ஆகியோர் பருத்திவீரன் பட வெளியீட்டு சமயத்தில் என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக கூறினர்.

இந்த விவகாரத்தில் கார்த்தி, சூர்யா இருவருமே மெளனம் காத்து வருவதால் இந்த பிரச்சினை இன்னும் முடிந்தபாடில்லை.

Oruvan

விசித்ரா மீட்டூ விவகாரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள விசித்ரா, அதில் தனக்கு சினிமாவில் நேர்ந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார்.

தெலுங்கு நடிகர் பால கிருஷ்ணா உடன் ஒரு படத்தில் நடித்தபோது தினந்தோறும் இரவு தனது ஓட்டல் அறையை தட்டி தொல்லை செய்தார்கள் என்றும், பாலகிருஷ்ணாவே தன்னை நேரடியாக ரூமுக்கு அழைத்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிறகு தங்கியிருந்த ஓட்டல் நிர்வாகத்தில் இருந்த ஒருவர் உதவியால் படப்பிடிப்புகள் முடியும் வரை அறைகளை மாற்றி மாற்றி தங்கி தன்னை பாதுகாத்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

அது மட்டும் இல்லை, அன்று பாதுகாப்பு வழங்கிய அந்த நபர் தான் தன்னுடைய காதல் கணவர் என்பதையும் அவர் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

Oruvan

திரிஷா – மன்சூர் அலிகான்

லியோ படத்தில் நடிகை திரிஷா உடன் தனக்கு நெருக்கமான காட்சிகள் இல்லை என்றும், நடிகைகளுடன் படுக்கையறை காட்சியில் நடிப்பது குறித்தும் கொச்சையாக மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியிருந்தார்.

இதனை பார்த்த நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்ததோடு, இந்த விவகாரம் மகளிர் ஆணையம் வரை சென்று மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பிறகு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு அறிக்கை அனுப்பினார். பின்னர் திரிஷா வழக்கை வாபஸ் பெற்றார்.

அதன்பின்னர் மீண்டும் இந்த பிரச்சனையை கிளறிவிட்ட மன்சூர் திரிஷா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்றும் விசாரணையில் உள்ளது.

Oruvan

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading