Local

2024ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை தெரிவு

2024ஆம் ஆண்டிற்கான உலகின் நான்காவது சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு வந்து செல்லும் சுற்றலா பயணிகள் தங்களின் அனுபவங்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிர்ந்து வரும் செய்திகள், காட்சிகள், புகைப்படங்கள் வாயிலாக பெற்றப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையை பொருத்தவரை மிகக் குறுகிய தூரங்களில் பல்வேறு விடயங்களை இலங்கையில் பார்வையிடும் சந்தர்ப்பம் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வாழ் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அமைச்சும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு செயற்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமையும் வரவேற்கத்தக்கவிடயமாகும்.

2023ம் ஆண்டில் உலகில் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள மிகவும் உசிதமான நாடுகளின் வரிசையில் இலங்கை 23ஆம் இடம் வகிப்பதாக பிரபல போர்பஸ் சஞ்சிகை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading