Local

21 தேங்காய்களை திருடியவருக்கு 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பு!

காலி, ரயில் சேவையாளர்களின் உத்தியோகபூர்வ தங்குமிடங்கள் அமைந்துள்ள காணியில் உள்ள தென்னை மரம் ஒன்றில் திருட்டுத் தனமாக 21 தேங்காய்களை பறித்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் காலி பிரதான நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் ஆஜர் செய்தபோது அவரை 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

காலி, கந்தேவத்த பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே பிடிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை, சந்தேக நபர், குறித்த 21 தேங்காய்களையும் பறித்துக்கொண்டு, அவற்றை மூட்டை கட்டும்போது ரயிவ் பாதுகாப்பு ஊழியர்களால் கைது செய்யப்பட்டு காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்தே காலி பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் குறித்த விசாரணைப் பிரிவின் ஊடாக சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading