Cinema

22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்!

22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் முதல் படைப்பு என்ற பெருமையைக் கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் பெற்றிருக்கின்றது.

2003இல் சாகித்ய அகடமி விருதுபெற்ற கள்ளிக்காட்டு இதிகாசத்தை சாகித்ய அகடமி 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வருகின்றது.

அகடமி விருதுபெற்ற ஒரு படைப்பு 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

அதன் முதற்கட்டமாக இந்தி, மலையாளம்,உருது, கன்னடம் ஆகிய மொழிகளின் மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன.

இது குறித்துக் கவிஞர் வைரமுத்து வெளியிட்டிருக்கும் காணொளியில் இது தமிழுக்குப் பெருமை என்றும் மகிழ்ச்சி  வெளியிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading