Cinema

30 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ஷாருக்கான், சல்மான்கான் கூட்டணி!

பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கானும் சல்மான் கானும் சுமார் 30 ஆண்டுகளுக்குப்பின் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கவிருக்கின்றனர்.

இருவரும் Tiger vs Pathaan எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

Yash Raj Films-இன் தயாரிப்பில் திரைப்படம் 2025 ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1995ஆம் ஆண்டு வெளியான கரன் அர்ஜுன் திரைப்படத்தில் நடிகர்கள் இணைந்து நடித்தனர்.

அதன்பின் ஒருவர் மற்றவரின் திரைப்படங்களில் அவ்வப்போது வருவதுண்டு.

அண்மையில் ஷாருக் கான் நடித்த பத்தான் திரைப்படத்தில் சல்மான் கான் தோன்றினார்.

சல்மான் கானின் எதிர்வரும் ‘Tiger 3’ திரைப்படத்தில் ஷாருக் கானைப் பார்க்கமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading