Local

30 ஆயிரம் லீட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் விபத்து!

திருகோணமலை ஐ.ஓ.சி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து ஹப்புத்தளை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை குறித்த பௌசர் 30,000 லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற போதே ஹப்புத்தளை- பங்கெட்டிய பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதி வழுக்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்துக்குள்ளான பௌசரிலிருந்து பிரதேசவாசிகள் எரிபொருளை சேகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading