Up Country

300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – ஒருவர் பலி – மூவர் காயம்

பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவிற்குள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (17) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தின் போது சம்பவ இடத்திலேயே ஆண் ஒருவர் பலியாகியுள்ளதுடன், காரின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயமடைந்த மூவரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழந்தவரின் சடலம் அதே வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாகப் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading