Local

31 வருடங்களாக காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்துடன் வாகனம் செலுத்தியவர் கைது

31 வருடங்களாக காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்துடன் வாகனம் செலுத்தி வந்த ஐ.தே.கவின் பேருவளை நகரசபை உறுப்பினர் ஒருவர் இன்று வசமாக சிக்கியுள்ளார்.

பேருவளை- காலி வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் அருகில், நகரசபை உறுப்பினரின் பி.எம்.டபிள்யூ காரை பொலிசார் வழிமறித்து சோதனையிட்டனர்.

குறித்த வாகனத்தில் சட்டவிரோதமாக சிகரெட் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, வாகனத்தை செலுத்தி வந்த பேருவளை நகரசபை உறுப்பினர் 31 வருடங்களாக செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்தில் வாகனம் செலுத்தி வந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனையடுத்து குறித்த நகரசபை உறுப்பினர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading