Lead NewsLocal

38 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 321 பேர் உயிரிழப்பு! – சபையில் அரசு அறிவிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது எனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிரிழந்தவர்களில் 38 வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர். அதேவேளை, 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 375 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading