Sports

41 வயதிலும் அசத்தும் கிறிஸ் கெய்ல் 14ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை!

செயின்ட் லூசியாவில் நேற்று நடந்த 3வது டி20 கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை, வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியாவை வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது.  

தொடர்ந்து இன்று நடந்த 3வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பின்ச் 30 ரன்களும், ஹென்ரிக்ஸ் 33 ரன்களும் எடுத்தனர். 142 ரன்கள் என்ற இலக்கை 14.5 ஓவர்களில் எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. கிறிஸ் கெய்ல் 38 பந்துகளில் 67 ரன்களை குவித்து, வழக்கமான தனது அதிரடி மூலம் அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

இந்த ஆட்டத்தின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் டி20 தொடரில் 14 ஆயிரம் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 41 வயதாகும் கிறிஸ் கெயில் இந்தப் போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதனை தன்னுடைய 431 ஆவது டி20 போட்டியில் செய்திருக்கிறார்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading