Cinema

41 வயதில் கர்ப்பமான நடிகை நமீதாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நமீதா. இவர் விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார்.

ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக தெரிவித்த அவர், பின்னர் நமீதா கலந்துக் கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு நமீதா – வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தற்போது 41 வது பிறந்தநாளில் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார் நமீதா.

அதில், கூறியதாவது, தாய்மை… புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, ​​புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது.

நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன். உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள், அனைத்தையும் என்னால் உணர முடிகிறது.,

நான் இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய் என குறிப்பிட்டுள்ளார். தற்போது இன்று 41-வது பிறந்தநாள் கொண்டாடும் நமீதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading