Sports

43 பந்துகளில் 193 ஓட்டங்கள் குவித்து சாதனை

ஐரோப்பியன் கிரிக்கெட் ‘டி10’ தொடரில் பிரபல வீரர் ஹம்சா சலீம் தார் 43 பந்துகளில் 193 ஓட்டங்களை விளாசியுள்ளார்.

ஸ்பெயினின் பார்சிலோனாவில் ஐரோப்பியன் கிரிக்கெட் டி10 தொடர் நடக்கிறது. அதில் அண்மையில் கேடலுன்யா ஜாகுவார் (சி.ஜே.ஜி) அணியும், சோஹல் ஹாஸ்பிடல்டெட் (எஸ்.ஓ.எச்) அணியும் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேடலுன்யா அணிக்கு ஹம்சா சலீம் தார் மற்றும் யாசிர் அலி ஆகியோர் துவக்கம் தந்தனர்.

குறிப்பாக ஹம்சா சலீம் ருத்ரதாண்டவம் ஆடினார்.

12வது பந்தில் அரைசதம் கடந்த ஹம்சா சலீம், 24வது பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 43 பந்தில் 193 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் டி10 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ஹம்சா படைத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading