Cinema

43 வயதில் முதல் குழந்தைக்கு தாயாகும் பிரபல நடிகை!

பிரபல இந்தி நடிகை பிபாஷா பாசு கர்ப்பமாக உள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டு வெளியான அஜ்நபீ இந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிபாஷா பாசு.

அதனைத் தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்த இவர், தமிழில் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடித்திருந்தார். நடிகரும், மொடலுமான கரண் சிங் குரோவரை 2016ஆம் ஆண்டு பிபாஷா பாசு திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பிபாஷா பாசு வெளியிட்டுள்ளார்.

43 வயதில் குழந்தை பெறுவது என்பது சாதாரண விடயம் தான் என்பதை உணர்த்தும் விதமாக அவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading