World

47 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்ட கார்!

இத்தாலி நாட்டில் 47 ஆண்டுகளாக ஒரே இடத்தில் கார் ஒன்று நிறுத்தப்பட்ட சம்பவம் குறித்த விடயம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த தம்பதி ஆங்கிலோ ஃப்ரிகோலென்ட் – பெர்டிலா மோடோலோ தம்பதிகளுக்கு சொந்தமாக கார் தான் அது.

இந்த தம்பதிகள் 1962ல் ஒரு பத்திரிக்கை நடத்தி வந்துள்ளனர்.

அவர்கள் வைத்திருந்த லான்சியா ஃபூல்வியா என்ற காரில் தாங்கள் பிரிண்ட் செய்த செய்தி தாள்களை எடுத்து கடைகளுக்கு கொண்டு சென்று போட்டு வந்துள்ளனர்.

தினமும் அந்த கார் அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் நடத்தி வந்த பத்திரிக்கையை மூட முடிவு செய்தனர்.

ஆனால் அவர்களுக்கு விருப்பமில்லாமலேயே மூடியுள்ளனர். இதனால் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு முன்பு அவர்கள் பயன்படுத்தி வந்த காரை பார்க் செய்து விட்டு இனிஅந்த காரை தாங்கள் பயன்படுத்தப்போவதில்லை என்று முடிவு எடத்துள்ளனர்.

தாங்கள் பத்திரிக்கைநடத்தியதன் நினைவாக கார் ஒரே இடத்தில் நிற்க வைக்க முடிவு செய்து காரை விட்டு சென்றுள்ளனர். அவர்கள் விட்டு சென்று 47 ஆண்டுகளாக கார் அங்கேயே நிற்கிறது. இந்த கார் தற்போது அப்பகுதியில் சுற்றுலா தளமாக மாறிவிட்டது.

47 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் கார் என பலர் இந்த காரை காண வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading