LocalNorth

5 பிள்ளைகளின் தாய் மாயம்! – கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சியில் குடும்ப பெண் ஒருவர் காணாமல்போயுள்ளமை தொடர்பில், பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிளிநொச்சி இராமநானத்பாம் மருதநகர் பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு காணாமல்போயுள்ளார் என அவரின் கணவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி வீட்டிலிருந்து சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்று திரும்புவதாகத் தெரிவித்து சென்ற இந்த குடும்பப்பெண் இதுவரை வீடு திரும்பவில்லை எனக் கணவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பெண்ணை தமது உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிய போதிலும் இன்றுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் பெண்ணின் கணவர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, அண்மைக்காலமாக குடும்பப் பெண்கள் வெளிநாடுகள் செல்வதும், காணாமல்போனதன் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுவதுமான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், காணாமல்போன இந்தக் குடும்பப் பெண் தொடர்பில் தகவல் கிடைக்குமிடத்து தெரியப்படுத்துமாறு குடும்பத்தினர் கோருகின்றனர்.

இவர் தொடர்பான தகவல்கள் கிடைக்குமிடத்து அவரின் கணவரான இராசதுரை நாகராசாவை 0776753485 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading