World

5 வயது மகன் சேட்டை செய்ததால் பிறப்புறுப்பில் சூடு வைத்த தந்தை!

5 வயது மகன் சேட்டை செய்ததால் பிறப்புறுப்பில் சூடு வைத்த தந்தை..!
வயநாட்டின் சுல்தான் பத்தேரியை சேர்ந்த உதயகிரி என்பவரது மனைவி உடலில் காயங்களுடன் இருக்கும் மகனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்.

சிறுவனின் கழுத்து, கை, வயிறு, முதுகு பகுதிகளில் ரத்தக்கட்டும், பிறப்புறுப்பில் சூடு வைத்த காயமும் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளனர்.

அதில் சிறுவன் சேட்டை செய்ததால் அவரது தந்தை வயரால் அடித்து துன்புறுத்தியதுடன் சூடு வைத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து மருத்துவர்கள் புகார் அளித்ததால் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான சிறுவனின் தந்தையை தேடி வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading