World

50 செ.மீ நீளமான காதுகளை கொண்ட ஆட்டுக்குட்டி ஆச்சரியத்தில் உரிமையாளர்!

பாகிஸ்தான் நாட்டின் கராட்சி மாகாணத்தைச் சேர்ந்த முகமது ஹசன் நரிஜோ என்பவரின் வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரது ஆட்டுப் பண்ணையில் ஒரு ஆடு குட்டிகள் ஈன்றது.

அந்த ஆட்டுக்குட்டியின் காது மட்டும் அதிக நீளம் கொண்டதாக இருப்பதைக் கண்டு உரிமையாளர் ஆச்சரியம் அடைந்துள்ளார்.

அந்த ஆட்டுக்குட்டிக்குச் சம்பா எனப் பெயரிட்ட முகமது, ஆட்டுக்குட்டியின் காது எவ்வளவு நீளமாக உள்ளது என அளவெடுத்துள்ளார்.

அதில் ஒவ்வொரு காதும் 19 இன்ச் நீளமாக அதாவது சுமார் 50 சென்டிமீட்டர் நீளமாக இருந்துள்ளது.

இதையடுத்து, அந்த ஆட்டுக்குட்டியை அக்கம்பக்கத்தினர் வந்து ஆர்வமாகக் கண்டு சென்றனர்.

இதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் வித்தியாசமான முறையில் ஒற்றை கண்ணுடன் ஆட்டுக்குட்டி பிறந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு இடுப்புகள் நான்கு கால்களுடன் ஆட்டுக்குட்டி பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading