Local

53 நாட்களுக்கு பிறகு கிடைத்த ‘முதலுதவி’ – 90 தண்ணீர் பௌசர்களைக் கையளித்தது சீனா!

இலங்கைக்கு  தண்ணீர் பௌசர்கள் 90 ஐ சீன அரசு இன்று (19) அன்பளிப்புசெய்தது. சீனாவுக்கும், இலங்கைக்குமிடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பௌசர்களுக்குரிய சாவிகளையும், ஆவணங்களையும்  இலங்கைக்கான சீத் தூதுவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளர் ஆர். செனவிரத்ன மற்றும் சீன தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு பிறகு இலங்கைக்கு கிடைக்கும் முதலாவது வெளிநாட்டு உதவி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் நெருக்கடியால் அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading