Local

6 ஆண்டுகளில் 445 யானைகள் பலி!

2018 ஆம் ஆண்டில் முதல் 10 மாதங்களில் 311 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என்று வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்கள் காட்டு யானைகள் தாக்கி 95 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மனித செயற்பாட்டினாலேயே, அதிக யானைகள் உயிரிழந்துள்ளன.

இதேவேளை உயிரிழந்த யானைகளில் 48 யானைகள், துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளன.

அத்துடன் 29 யானைகள் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம், 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரை ஆயிரத்து 445 யானைகள் உயிரிழந்துள்ளன.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading