World

60 குரங்குகளுக்கு கொரோனா 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்!

டெல்லி அரசின் வனத்துறை அறிக்கையின்படி, ஐதராபாத் மிருகக்காட்சிசாலையில் உள்ள சில சிங்கங்கள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டன. அதையடுத்து ெடல்லியில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த சில பகுதிகளில் வசிக்கும் குரங்குகளை பிடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதிக்கப்பட்டது. தொற்றுநோய் மற்ற விலங்குகளுக்கும் பரவாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தெற்கு டெல்லியின் சில பகுதிகளிலிருந்து பிடிக்கப்பட்ட குரங்குகளில் 60 குரங்குகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. அதையடுத்து அவற்றை துக்ளகாபாத்தில் உள்ள விலங்கு மீட்பு மையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்துள்ேளாம்.

இவற்றில் 30 குரங்குகளின் 14 நாள் தனிமைப்படுத்தல் நிறைவடைந்துள்ளது. இவை, அசோலா பாட்டி வனவிலங்கு சரணாலயத்தில் விடப்படும். மீதமுள்ள 30 குரங்குகள் இன்னும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை பிடிபட்ட குரங்குகளில் எவற்றுக்கும் கொரோனா பாசிடிவ் என்று ரிசல்ட் வரவில்லை. இந்த குரங்குகளுக்கு ஆன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், அவை எதிர்மறையானவை என்று ரிசல்ட் வந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading