World

65 வயது காதலிக்காக தாயை கொன்ற 47 வயது மகன்

களக்காதலுக்காக தூக்க மாத்திரை கொடுத்து தாயை கொடூரமாக கொலை செய்த வழக்கில் மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காமராஜர் காலனி மாரியப்பன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி நல்லம்மாள்(65). இவருக்கு சிவக்குமார்(47) என்ற மகனும் லதா என்ற மகளும் உள்ளனர். சிவக்குமாருக்கு திருமணமாகவில்லை. லதாவிற்கு திருமணமாகி காமராஜர் காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் நல்லம்மால் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது வாயில் துணியை வைத்து அமுக்கியிருந்தனர். தாய்க்கு சாப்பாடு கொடுக்க சென்ற லதா இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, மூதாட்டி நல்லம்மாளின் மகன் சிவக்குமார் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் தனது தாயை கொலை செய்ததாக சரணடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தனது தாய் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல் இருந்த அவர் தனது கள்ளக்காதலுக்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து படுக்க வைத்தேன். பிறகு வாயிலும், மூக்கிலும் சேலை துணியால் இறுக்கி கொலை செய்தேன் என கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading