World

7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

சிலி மற்றும் அர்ஜென்டினாவின் தெற்கு கடற்கரைகளில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 9:58 (12:58 GMT) மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரத்திற்கு 219 கிலோமீட்டர் (173 மைல்) தெற்கே, கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

சுனாமி அபாயத்தை மேற்கோள் காட்டி, சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் பதிலளிப்பு சேவை (SENAPRED), அண்டார்டிக் பிரதேசம் மற்றும் மாகல்லனெஸ் பகுதியின் கடற்கரைப் பகுதி மக்களை வெளியேற்ற உத்தரவிட்டது.

சுனாமி எச்சரிக்கை நடைமுறையில் உள்ள நிலையில், பின்னடுக்கங்கள் (aftershocks) ஏற்பட வாய்ப்புள்ளதால், அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். குடியிருப்பாளர்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் உஷுவாயா மற்றும் புவேர்ட்டோ வில்லியம்ஸில் உணரப்பட்டுள்ள நிலையில், சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading