Local

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; 7 பெண்களுக்கு விளக்கமறியல்!

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டே வீதி, எதுல்கோட்டே, இராஜகிரிய என்ற முகவரியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நிலையத்தின் முகாமையாளரான பெண் உட்பட 7 பெண்கள் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

28, 25, 28, 29, 32 மற்றும் 48 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று புதுக்கடை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading