LocalUp Country

ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி மாணவர்கள் 70 பேர் கொட்டகலை வைத்தியசாலையில்!

கொட்டகலை, பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 70 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கல்லூரியில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக இவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை 8 மணியளவில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 48 பேர் மாணவிகள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த உணவு ஒவ்வாமை எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கொட்டகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(பத்தனை நிருபர்)

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading