World

7700 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட தலைமுடி!

பிரெஞ்சு மன்னர் ஒருவரது தலைமுடி சில 7,700 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

தலைமுடிகள் சில தங்கத்தினை விட அதிக தொகைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலாம் நெப்போலியனின் (Napoleon I) தலைமுடிகளே இவ்வாறு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. Cherbourg (Channel) நகரில் உள்ள ஏல விற்பனைக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்படி தலைமுடிகள் ஏலத்துக்கு விடப்பட்டன. 

அதன் ஆரம்ப ஏலத்தொகை 1,200 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

பழைய பொருட்களை சேகரிக்கும் ஆர்வம் கொண்ட இருவர் தொலைபேசியூடாக ஏலத்தொகையை கோரி, இறுதியாக €7,700 யூரோக்களுக்கு தலைமுடிகள் விற்பனையாகின.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading