Sports

8 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இந்திய வீரர் தவான்!

இந்திய அணியின் பிரபல முன்னணி துவக்க வீரரான ஷிகர் தவான் கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 145 ஒருநாள் போட்டிகள், 34 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட தவான் தற்போது ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருகின்றார்.

இந்நிலையில் 35 வயதான ஷிகர் தவான் தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துவிட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் முன்னணி வீரரான ஷிகர் தவான் தன்னை விட 11 வயது மூத்தவரும், ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷா முகர்ஜி என்பவரை கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே ஆயிஷா முகர்ஜிக்கு முதல் திருமணத்தின் மூலம் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால் அந்த குழந்தைகளை தத்து எடுத்துக்கொண்ட தவான் மேலும் ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டார்.

இப்படி 8 ஆண்டுகள் சிறப்பாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனை ஆயிஷா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் உறுதி செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : இரண்டாவது முறையாக விவாகரத்து செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கருதப்படும் முன்னணி வீரரான இவர் தற்போது திடீர் விவாகரத்து பெற்றுள்ளது சமூக வலைதளங்களில் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading