World

85வது பிறந்தநாளை கொண்டாடிய முதலை!

செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் அமைந்துள்ள மிருக காட்சி சாலையில் வசிக்கும் முதலை ஒன்று தனது 85 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது.

இதன்படி ,முஜா என்று பெயர் கொண்ட அந்த முதலை கடந்த 1937ஆம் ஆண்டு இங்கு கொண்டு வரப்பட்டது.பல்வேறு குண்டுவீச்சு சம்பவங்களில் உயிர் தப்பியுள்ள இந்த முதலை இன்னும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் ,மாட்டிறைச்சி, பறவைகள், முயல்கள், எலிகள் மற்றும் குதிரை இறைச்சி ஆகியவை இந்த முதலைக்கு உணவாக அளிக்கப்பட்டு வருகின்றன.இந்த வயதிலும் முதலை சுறுசுறுப்பாக இருப்பதாக மிருகக் காட்சி சாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading