87 வயதில் தந்தையான சீன ஓவியர்! 37 வயது மனைவிக்கு பிறந்த ஆண் குழந்தை
சீனாவில் 87 வயது ஓவியருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
87 வயது ஓவியருக்கு பிறந்த ஆண் குழந்தை
சீனாவில் 87 வயது ஓவியர் 37 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சீனாவை சேர்ந்த Fan Zeng என்ற 87 வயது பிரபல ஓவியர் சமீபத்தில் தந்தை ஆகியுள்ளார்.
ஏற்கனவே மூன்று முறை விவாகரத்து செய்து கொண்ட Fan Zeng தற்போது சூ மெங் என்ற 37 வயது பெண்ணுடன் திருமண உறவில் உள்ளார்.
டிசம்பர் 11ம் திகதி ஆண் குழந்தை பிறந்து இருப்பதை ஃபேன் ஜெங் மற்றும் சூ மெங் தம்பதி தங்களுடைய சமூக ஊடக பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
பிரபல ஓவியரான Fan Zeng யின் 2008 முதல் 2024ம் ஆண்டு வரையிலான ஓவியங்கள் ரூ.5000 கோடிக்கு ஏலம் போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.


You must be logged in to post a comment.