Cinema

88 வயது மாமியாரின் ஆசையை நிறைவேற்றிய நடிகை குஷ்பு!

தன்னுடைய மாமியாரின் ஆசையை நடிகை குஷ்பூ நிறைவேற்றி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் குஷ்பூ. உண்மையிலேயே குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான் ஆகும். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். –

பின்னர் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் நடிகை குஷ்பூ அவர்கள் 80களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் திகழ்ந்து இருக்கிறார். சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இதனால் ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள்.

குஷ்பூ திரைப்பயணம்: இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிலும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து இருந்தார். குஷ்பூவின் அரசியல்: தற்போது இவர் பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். மேலும், குஷ்பு கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக குஷ்பூ நடித்து வருகிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் சில படங்களிலும் கமிட்டாகி குஷ்பூ பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

குஷ்பூ குடும்பம்: இதனிடையே குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். மேலும், இவர் தன் கணவர் நடிக்கும் படங்களை அவ்னி சினிமாஸ் என்கின்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்தும் வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய மாமியாரின் ஆசையை குஷ்பூ நிறைவேற்றி இருக்கிறார். அதாவது சமீபத்தில் அளித்த பேட்டியில் குஷ்பூ, என்னுடைய மாமியார் கிரிக்கெட் வீரர் தோனியின் மிகப்பெரிய ரசிகை. அவருக்கு தற்போது 88 வயதாகிறது. மாமியார் ஆசையை நிறைவேற்றிய குஷ்பூ: அவருடைய வாழ்நாள் முடிவதற்குள் தோனியை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதோடு அவர் தோனியை பார்க்காமல் இறந்து விட்டால் ஆவியாக வந்து என்னை தொந்தரவு செய்வதாக என்னிடம் கூறினார். எனக்கு அவருடைய ஆசை நன்றாக புரிந்தது. பின் நான் இதற்காக மூன்று ஆண்டுகள் திட்டமிட்டு இருந்தேன். தற்போது தான் அது நடந்தது. என்னுடைய அத்தையை நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து வந்து அங்கு தோணியை சந்திக்க வைத்தேன். அது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்று கூறி தன்னுடைய மாமியார் தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading