Local

8875 வீதி விபத்துக்கள் 1043 பேர் உயிரிழப்பு!

நாட்டில் அண்மைக்காலமாக விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரை 8,875 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விபத்துக்களால் 1,043 போ் உயிரிழந்துள்ளதாக கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அதிகளவான வீதி விபத்துக்கள் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் பேருந்துகளினால் ஏற்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading