Local

வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை!

சபுகஸ்கந்த, கல்வல சந்தியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

35 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading