Local

இளைஞர் ஒருவர் கதறக்கதற கொடூரமாக வெட்டிக்கொலை!

பலப்பிட்டிய – மீகெட்டுவத்த பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு கதறக்கதற கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அம்பலாங்கொட பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 9 மணியளவில் மீகெட்டுவத்த வயோதிப இல்லத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்தவர் இரத்தம் சிந்தச் சிந்தப் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொட பொலிஸாரின் தகவலின்படி இந்தத் தாக்குதல் தனிப்பட்ட குரோதத்தின் விளைவாக ஏற்பட்டுள்ளது.

பலப்பிட்டிய, சிரிசேன மாவத்தையைச் சேர்ந்த 29 வயதான தமித் குமார டி சொய்சா என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்று நடத்தப்படவுள்ளது.

இந்தத் தாக்குதலின் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைக் கைதுசெய்வதற்காக அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading