Local

இந்தியா பறந்தார் ரணில்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் புதுடில்லி நோக்கிப் பயணமாகியுள்ளார்.

பிரதமர் தலைமையிலான குழுவில் 15 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள், ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தான யு.எல்-195 என்ற விமானத்தில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 2:15 மணிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்தப் பயணத்தின்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் வைத்து சந்திக்கவுள்ளார்.

அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அமைச்சர் ராஜநாத் சிங் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரையும் பிரதமர் சந்திக்கவுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading