World

பிரியங்காவின் வருகையால் மனம் மாறிய அகிலேஷ் யாதவ்! – இரகசிய உடன்படிக்கைக்கும் முஸ்தீபு

பிரியங்கா அரசியலில் நுழைந்திருப்பதைப் பாராட்டிய அகிலேஷ் யாதவ் காங்கிரஸூடன் இரகசிய உடன்பாடு செய்துகொள்ள விரும்புகிறார் எனத் தெரியவந்துள்ளது.

காங்கிரசுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பிரியங்கா தீவிர அரசியலில் இறங்கினார். அவர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸூன் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகின்றது.

எனவே, காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்தது. இதன்காரணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டு வாக்குகள் பிரியும் நிலை உருவானது. இது பா.ஜனதாவுக்கு சாதகமாகிவிடும் என்று கருதப்படுகின்றது.

பிரியங்காவின் வருகையாலேயே அகிலேஷ் யாதவிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

பிரியங்கா அரசியலில் நுழைந்திருப்பதை அகிலேஷ் யாதவ் பாராட்டி இருந்தார்.

பிரியங்கா வருகையைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் காங்கிரஸின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக அவரும் கருதுகின்றார்.

எனவே, காங்கிரஸூடன் இரகசிய உடன்பாடு செய்துகொள்ள அவர் விரும்புவதாகத் தெரிகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading