Lead NewsLocal

இலங்கை பொறுப்புக்கூறுவதற்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது! – சர்வதேச மன்னிப்புச் சபை காட்டம்

“இலங்கை அரசு 2015ஆம் ஆண்டில் வாக்களித்தவாறு உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டை ஈடுசெய்தல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய காலம் கடந்து கொண்டிருக்கின்றது.”

– இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.

“போர் முடிவடைந்து இவ்வருடத்தின் மே மாதத்துடன் பத்து வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் எவ்வளவு காலம் உண்மைக்காகவும், நீதிக்காகவும் காத்திருப்பது? கேள்வி எழுகின்றது” எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் பொறுப்புக்கூறல் கடப்பாடுகளில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து தெற்காசியப் பிராந்தியங்களுக்குப் பொறுப்பாக இயங்கிவரும் சர்வதேச மன்னிப்புச் சபை அலுவலகம் விடுத்துள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading