Local

படையினர் தவறிழைக்கவில்லை; எந்த விசாரணைக்கும் நாம் தயார்! – இராணுவத் தளபதி இறுமாப்பு

போரின்போது இலங்கைப் படையினர் எந்தத் தவறையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, தமது படையினரைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு விசாரணைக்கும் தயாராக இருப்பதாகக் கூறினார்.

வெலிகமவில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எந்தவொரு விசாரணையை எதிர்கொள்வதற்கும் நாங்கள் அச்சம் கொள்ளவில்லை. ஏனென்றால் நாங்கள் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை.

எந்தவொரு போரிலுமே பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படும். அது கடினமான உண்மை. அது இல்லாமல் போரை நடத்த முடியாது.

அதற்காக, நாங்கள் போரின்போது அதனைச் செய்தோம் என்று அர்த்தமில்லை.

கடந்த காலத்தைத் தோண்டக்கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ள நல்ல விடயங்களைப் பார்க்கவேண்டும்.

சர்வதேச விசாரணை தேவையில்லை. எமது நீதித்துறைக்கு அதற்கான தகுதி உள்ளது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading