Lead NewsLocal

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருடன் ஜெனிவாவில் சுமந்திரன் எம்.பி. சந்திப்பு!

– புதிய பிரேரணை குறித்து ஆராய்வு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையாரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார்.

இதன்போது ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ஜெனிவாவில் நேற்று நடைபெற்ற ஒரு பக்க நிகழ்வொன்றின்போது இந்தச் சந்திப்பு நடந்தது.

இது குறித்து சுமந்திரன் தெரிவிக்கையில்,

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடன் இலங்கை விடயமாக நேற்று செவ்வாய்க்கிழமை உரையாடினேன். அவரது அறிக்கைக்காக எமது மக்களின் நன்றிகளைத் தெரிவித்தேன். இன்று புதன்கிழமை அந்த அறிக்கையைத் தான் சமர்ப்பிப்பார் எனறு அவர் கூறினார்.

இன்றைய அமர்வில் இலங்கை விவகாரம் பேசப்படும். அதன் பின்னர் நாளை பிரேரணை நிறைவேற்றப்படும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading