LocalNorth

வடக்கில் புலிகளுக்குப் பயந்து ஒதுங்கியவர்களே பிரச்சினை! – கூறுகின்றார் இராணுவத் தளபதி

“போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளுக்குப் பயந்து ஒதுங்கியவர்களே வடக்கில் தமிழ் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையும் விரிசலை ஏற்படுத்த முனைகின்றனர்.”

– இவ்வாறு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“வடக்கிலுள்ள தமிழ் மக்கள் இயற்கை இடர்களில் சிக்கும்போது, உடனடியாக அந்த மக்களுக்கு வேண்டிய உதவிகளை இராணுவத்தினர் செய்து வருகின்றனர். ஆனால், தங்களது இத்தகைய செயற்பாடுகளின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர், எங்களது பெயருக்குத் தொடர்ச்சியாகக் களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இராணுவத்தினரை விமர்சனம் செய்கின்ற இவர்கள், வடக்கு மக்களுக்காக எதனையும் செய்ததில்லை. அவர்கள் எங்களின் பாதுகாப்பிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading