Local

மாவீரர் தினத்தையொட்டி இராணுவத்தினர் ரோந்து!

யாழ்ப்பாணம் நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகள் குறுக்கு வீதிகள், தோட்டவெளிகள், பொது இடங்கள் என இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தமிழர் தாயகத்தில் நேற்றுக் கொண்டாடப்பட்டது. அத்துடன், இன்று மாவீரர் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்தநிலையில், இராணுவத்தினர் வீதி ரோந்துகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவத்தினர் கால்நடையாகவும் சைக்கிள்களிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுப் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதைக் காண முடிந்தது.

இத்தகைய இராணுவ ரோந்து நடவடிக்கைகள் வடமராட்சி மற்றும் தென்மராட்சி மற்றும் நல்லூர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading